4 துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது


4 துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2023 2:45 AM IST (Updated: 4 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கோவையை அடுத்த தடாகம் அருகே செங்கல் சூளையில் 4 துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்


துடியலூர்


கோவையை அடுத்த தடாகம் அருகே செங்கல் சூளையில் 4 துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வனத்துறையினர் ரோந்து


கோவை வனச்சரகம் தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்்த பகுதியில் மூடப்பட்ட செங்கல் சூளையில் நாட்டு துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதுகுறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து கோவை வன அலுவலர் அருண் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அந்த செங்கல் சூளை சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 45) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.


4 துப்பாக்கி பறிமுதல்


வனத்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் செங்கல் சூளை பகுதியில் மேலும் ஒரு நாட்டு துப்பாக்கி, ஏர் கன் ரக துப்பாக்கி 2 என 3 துப்பாக்கிகள், பயன்படுத்தாத தோட்டா ஒன்று, பயன்படுத்திய தோட்டா 30, தோட்டா தயாரிப்பதற்காக 350 கிராம் கரிமருந்து ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து வனத்துறையினர் 4 துப்பாக்கிகள், தோட்டாக்கள், கரிமருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்து அவற்றையும், ஞானசேகரனையும் தடாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.


கைது


அங்கு நடத்திய விசாரணையில் ஞானசேகரன் உரிமம் இல்லாமல் துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.



Next Story