கஞ்சா வைத்திருந்தவர் கைது


கஞ்சா வைத்திருந்தவர் கைது
x

விக்கிரமசிங்கபுரத்தில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அடையகருங்குளம் உல்லாச நகரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 23) என்பவர் கோடாரங்குளம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்தபோது கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. கார்த்திகேயனை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story