``நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு, டீக்கடையில் கிடந்தது'' மனுவுடன் வந்தவர் வேதனை


``நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு, டீக்கடையில் கிடந்தது மனுவுடன் வந்தவர் வேதனை
x

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு, டீக்கடையில் கிடந்தது. இதனால் மனுவுடன் வந்தவர் வேதனை தெரிவித்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு தரப்பினர் வந்து மனு கொடுத்தனர்.

இதேபோல் அம்பை கோவில்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஒரு மனுவுடன் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது மனைவி கடந்த வாரம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அதில், நாங்கள் 30 வருடமாக குடியிருந்து வரும் வீட்டின் முன்புள்ள பொதுப்பாதையை சிலர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதனை தடுக்க வேண்டும், என கூறியிருந்தோம்.

ஆனால் இந்த மனு பாளையங்கோட்டையில் உள்ள ஒரு டீக்கடையில் இருந்தது தெரியவந்தது. இது எப்படி அங்கு சென்றது? என்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, மனுவை பெற்றுக்கொள்ளும்போது `சீல்' வைத்து கொடுப்பது வழக்கம். ஆனால் மனுதாரர் மனுவை கொடுக்காமல் சென்றிருக்கலாம், என்று தெரிவித்தனர்.

1 More update

Next Story