விபத்தில் படுகாயம் அடைந்த உடற்கல்வி ஆசிரியர் சிகிச்சை பலனின்றி சாவு


விபத்தில் படுகாயம் அடைந்த உடற்கல்வி ஆசிரியர் சிகிச்சை பலனின்றி சாவு
x

விபத்தில் படுகாயம் அடைந்த உடற்கல்வி ஆசிரியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே உள்ள மட்டங்கால் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது 44). இவர் கறம்பக்குடி அரசு பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பணி முடித்து நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் சென்றபோது அந்த வழியாக சென்ற கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தங்கமணியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கமணி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் (21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story