பா.ம.க.வினர் மறியல்
பா.ம.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
நெய்வேலியில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுவதை கண்டித்து, அப்பகுதி மக்களுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்தும், அன்புமணி ராமதாசை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பஸ் நிலையம் அருகில் மாவட்ட அமைப்பு தலைவர் மருதுவேல் தலைமையில் பா.ம.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் வேப்பூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் குன்னம் கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story