ஜி.என்.மில் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது
ஜி.என்.மில் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது.இதற்கு ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் உடனடியாக தீர்வு காணப் பட்டது.
ஜி.என்.மில் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது.இதற்கு 'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் உடனடியாக தீர்வு காணப் பட்டது.
குடிநீர் குழாய் உடைப்பு
கோவையில் முக்கிய சாலைகளில் ஒன்றாக மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. இந்த சாலையில் ஜி.என்.மில் பிரிவில் அருகில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனை கடந்த மாதம் சரி செய்தனர். ஆனால் அதே இடத்தில் மீண்டும் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வெளியே வந்து கொண்டிருந்தது. அந்த குழாய் உடைப்பை சரி செய்யாததால் குடிநீ்ர் வீணாவதோடு, குழாயும் சேதம் அடையும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறும்போது,
கோரிக்கை
ஜி.என்.மில்ஸ் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அருகில் குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் அதை சரி செய்கிறார்கள். ஆனால் சரி செய்த இடத்தில் மீண்டும் உடைப்பு எற்பட்டுகிறது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாகவே இருப்பதால் மீண்டும்உடைப்பு ஏற்பட்டு பல நாட்கள் குடிநீர் வீணாகிறது.
இதை உரிய அதிகாரியிடம் சொன்னாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம், கோவை மாநகராட்சி இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சீரமைப்பு
இது தொடர்பாக 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஜான்சன்,உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், பொறியாளர் ஜெய்கணேஷ் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த குழாய் உடைப்பினை உடனடியாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு தீர்வு கிடைத்ததால் ெபாது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கூறுகையில், இப்பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாய்உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.அதை முழுமையாக ஆய்வு செய்து 24 மணி நேரத்துக்குள் அனைத்து உடைப்புகளையும் சரி செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது என்றார்.