மன்னார் வளைகுடா பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்


மன்னார் வளைகுடா பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்
x

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று ராமேசுவரத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று ராமேசுவரத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு மாநாடு

ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட 24-வது மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் செம்மமடம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

மாநாட்டில் மாவட்ட செயலாளர் முருகபூபதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், பார்த்திபன், ராமேசுவரம் தாலுகா செயலாளர் முருகானந்தம், தங்கச்சிமடம் தாலுகா செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகி காளிதாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தின் பல்ேவறு ஊர்களில் உள்ள கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காற்றாலை அமைப்பதை கைவிட வேண்டும்

மாநாட்டில் ராமேசுவரத்திற்கு அறிவிக்கப்பட்ட மீன்வள கல்லூரியை இந்த ஆண்டிலேயே தொடங்க வேண்டும். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றாலை அமைக்கும் மின்சாரத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மத்திய, மாநில அரசுகள் மீட்டுக் கொடுக்க வேண்டும்.கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தேசிய கடல் மீன்வள வரைவு சட்டம் 2021-ஐ ரத்து செய்யவேண்டும்.

நாட்டு படகு மற்றும் விசைப்படகுகளுக்கு அரசால் வழங்கப்படும் மானிய டீசலின் அளவை உயர்த்தி வழங்க வேண்டும். மீனவர்கள் பிடித்து வரும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு மீட்க முடியாமல் போன 14 நாட்டுப்படகுகளுக்கு அரசு புதிதாக படகுகள் வழங்க வேண்டும்.ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாநாடு நடைபெற்ற இடத்தில் இருந்து தொடங்கிய பேரணி பஸ் நிலையம், ெபாந்தம்புளி, சீத்தா தீர்த்தம், ராம தீர்த்தம், திட்டக்குடி சாலை வழியாக நகரின் முக்கிய பகுதிகளில் பேரணியாக வந்தனர்.


Related Tags :
Next Story