பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும்


பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும்
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும்; அ.தி.மு.க. கூட்டத்தில் வலியுறுத்தல்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. கிளை செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் சிவமனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பாரதி, மகளிர் அணி செயலாளர் சக்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கலந்துகொண்டு பேசினார்.

பெருந்தோட்டம் ஏரி மூலம் 5 ஊராட்சி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஏரியை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 20-ந்தேதி மதுரையில் பொன்விழா மாநாட்டிற்கு கிழக்கு ஒன்றியத்தில் இருந்து 100 வாகனங்களில் செல்வது எனவும், திருநகரி வெள்ளப்பள்ளம் உப்பனாரு பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறையை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் செல்லையன், பொருளாளர் செல்லத்துரை, இளைஞரணி செயலாளர் சந்திரசேகரன், பேரவை செயலாளர் செந்தில், ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தாமரை செல்வி திருமாறன், சோமசுந்தரம், அகோர மூர்த்தி, துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story