விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்ய வேண்டும்


விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்ய வேண்டும்
x

கலவை அருகே விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ராணிப்பேட்டை

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே பென்னகர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்

இப்பள்ளி அருகே 4 ஏக்கர் அளவில் விளையாட்டு மைதானம் உள்ளது,

மைதானத்தில் மாடுகளும் ஆடுகளும் கட்டி வருகின்றனர். அருகே உள்ள பொதுமக்களும் அசுத்தம் செய்து உள்ளனர்.

மேலும் செடி, கொடி வளர்ந்துள்ளது.

ஆகவே விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்து தர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story