விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 60). விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக மூட்டு வலியால் அவதியுற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வலி அதிகமாகியுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் ராஜேந்திரனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story