விஷம் குடித்த மூதாட்டி சாவு


விஷம் குடித்த மூதாட்டி சாவு
x

விஷம் குடித்த மூதாட்டி உயிரிழந்தார்

மதுரை

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 58). மாற்றுத்திறனாளி. இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி வழக்கம்போல் சாப்பிட வேண்டிய மருந்துக்கு பதிலாக தெரியாமல் அருகே இருந்த பூச்சி மருந்து மாற்றி குடித்து விட்டார். உடனே சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் மாயாண்டி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story