விஷம் குடித்த பெண் சாவு
விஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கலையநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி விஜயசாந்தி (வயது 28). இவர்கள் 2 பேரும் தங்கள் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் சிலருடன் சேர்ந்து கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள ஜோதிவடம் பகுதியில் தங்கி இருந்து, அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த விஜயசாந்தி சம்பவத்தன்று பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதைபார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜயசாந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.