விஷம் குடித்த பெண் சாவு


விஷம் குடித்த பெண் சாவு
x

விஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.

கரூர்

புன்னம் சத்திரம் அருகே மசக்கவுண்டன்புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வளர்மதி(வயது 44). இவர் உடல் வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்வலி சரியாகவில்லை. இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி இரவும் வளர்மதிக்கு உடல் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் குருணை மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.இதைக்கண்ட வளர்மதியின் மகன் பூபதி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி வளர்மதி நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பம் குறித்து பூபதி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story