சூறாவளி காற்றுக்கு மின்கம்பங்கள்-மரங்கள் சாய்ந்தன


சூறாவளி காற்றுக்கு மின்கம்பங்கள்-மரங்கள் சாய்ந்தன
x

சூறாவளி காற்றுக்கு மின்கம்பங்கள்-மரங்கள் சாய்ந்தன

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அதில் குடியிருப்பின் பிரதான சாலையில் 7-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது.. மேலும் மரங்கள் முறிந்தது. இதனையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாயினர்.

இதேபோல தோப்பூர் ஊராட்சியில் கண்மணி தெருவில் ஒரே சமயத்தில் 4 மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் 2 மரங்கள் சாய்ந்து தெருவில் விழுந்தது. இதனையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதி இரவு முழுவதும் இருளில் மூழ்கியது. இந்தநிலையில் தனக்கன்குளம் நேதாஜிநகரில் சாய்ந்த மரங்கள், மின்கம்பங்கள்அப்புறப்படுத்தப்பட் டன.

தோப்பூர் கண்மணி தெருவில் ஊராட்சி ஊழியர்கள் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும்பணியில் ஈடுபட்டனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்த மின்கம்பங்களில் அறுந்து தொங்கிய வயர்களை அப்புறப்படுத்தியதோடு புதிய மின்கம்பங்கள் ஊன்றும் பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story