போலீசார் விடிய, விடிய வாகன சோதனை


போலீசார் விடிய, விடிய வாகன சோதனை
x

நெல்லை மாவட்டத்தில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை நடத்தினார்கள்

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றை தடுக்கும் வகையில் நேற்று இரவு நெல்லை புறநகர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். முக்கிய சந்திப்புகளில் நின்று அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். நெல்லையை அடுத்த சங்கன்திரடு பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் முன்னிலையில் அதிரடி வாகன சோதனை நடைபெற்றது. அவர் மாவட்டத்தில் நடைபெற்ற சோதனைகளை ஆய்வு செய்தார். இந்த சோதனை விடிய விடிய அதிகாலை வரை நடைபெற்றது.


Next Story