தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை
விநாயகர் சதுர்த்தியையொட்டி தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்க ளை தவிர்க்கும் வகையில் கோவை ரெயில்நிலையம், பஸ்நிலையம் உள்பட மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் புறநகர் பகுதிகளில் உள்ள ஓட்டல், தங்கும் விடுதிகள் (லாட்ஜ்), அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு தங்கி இருந்தவரின் பெயர், முகவரி விவரங்கள் குறித்த பதிவேட்டை ஆய்வு செய்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடியிலும் போலீசார் 24 மணி நேரமும் வாகன தணிக்கை செய்து வருகிறார்கள்.
மேலும் சந்தேக நபர்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் 9498181212 என்ற போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.