வாலிபரை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, கத்தியை கைப்பற்றி போலீசார் விசாரணை


வாலிபரை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, கத்தியை கைப்பற்றி போலீசார் விசாரணை
x

வாலிபர் கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, கத்தியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

வாலிபர் கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, கத்தியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டை அடுத்த தேவனூர் பகுதியை சேர்ந்த காசி மகன் அருள்குமார் (வயது 37). இவரை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அத்தியந்தல் பகுதியை சேர்ந்த மாமலைவாசன் மற்றும் அவரது நண்பர்களான இளையராஜா, சூர்யா ஆகியோர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்தனர்.

கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கி எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில், அருள்குமாரை கொலை செய்வதற்காக மாமலைவாசன், இளையராஜா, சூர்யா ஆகிய 3 பேரும் கடந்த இரண்டு மாதங்களாக திட்டம் தீட்டி வந்த நிலையில் சம்பவத்தன்று அருள்குமார் மணலூர்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் செல்லும் போது அவரை பின் தொடர்ந்த 3 பேரும் துப்பாக்கியால் சுட்டதில் அருள்குமார் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்த மூன்று பேரும் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தும், பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தியை மணலூர்பேட்டையை சேர்ந்தவர்களிடம் வாங்கி வந்ததும் தெரியவந்தது.

துப்பாக்கி, கத்தி நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

மேலும் கொலை செய்த பிறகு துப்பாக்கி மற்றும் கத்தியை அப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஏரி பகுதியில் வீசிய நிலையில் அதனை போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story