கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய போலீசார்


கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய போலீசார்
x
தினத்தந்தி 3 Aug 2023 1:08 PM IST (Updated: 3 Aug 2023 3:58 PM IST)
t-max-icont-min-icon
சென்னை

கோயம்பேடு,

தூத்துக்குடியை சேர்ந்தவர் பரிசுத்த இமானுவேல். இவருடைய மனைவி ஜெபா. இவர் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் கண்ணா, மகேஸ்வரி மற்றும் போலீசார் தங்கள் வீட்டு இல்ல நிகழ்ச்சி போல் பெண் போலீஸ் ஜெபாவுக்கு வளைகாப்பு விழா நடத்தினார்கள்.

இதில் தாய்வீட்டு சீதனம் போன்று சீர்வரிசை தட்டுகளில் பழம், இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் வைத்து 7 விதமான சாதங்களை கொடுத்து வளைகாப்பு நடத்தி வாழ்த்தினர். போலீஸ் நிலையத்தில் கர்ப்பிணி போலீசுக்கு சக போலீசார் நடத்திய வளைகாப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story