ல்வாயில் குதித்து தற்கொலை செய்த தம்பதி


ல்வாயில் குதித்து தற்கொலை செய்த தம்பதி
x

உடுமலை அருகே காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்த தம்பதி உடுமலைைய சேர்ந்தவர்கள் என்றும், புற்றுநோயில் இருந்து மீள முடியாமல் இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

திருப்பூர்

தளி

உடுமலை அருகே காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்த தம்பதி உடுமலைைய சேர்ந்தவர்கள் என்றும், புற்றுநோயில் இருந்து மீள முடியாமல் இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தற்கொலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணைக்கு பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கும். காண்டூர் கால்வாயில் 80 வயது மதிக்கத்தக்க முதியவரும், 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியும் நேற்று முன்தினம் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இருவர்களின் உடல்கள் திருமூர்த்தி அணையில் மிதந்தது. அந்த உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அடையாளம் தெரிந்தது

விசாரணையில் அவர்கள் யார் என்று அடையாளம் தெரிந்தது. அதன்படி தற்கொலை செய்து கொண்ட முதியவரின் பெயர் கோவிந்தராஜ் (வயது 80) என்றும், அவருடன் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட மூதாட்டி அவருடைய மனைவி சாந்தாமணி (75) என்றும் தெரியவந்தது. இவர்களின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த வாளவாடி.

இவர்களுக்கு ராதா, மகேஷ் என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் ராதா தனது கணவருடன் கோவை மாவட்டம் சூலூரிலும், மகேஷ் தனது கணவருடன் உடுமலையிலும் வசித்து வருகின்றனர். கோவிந்தராஜூம், சாந்தாமணியும் மகள்கள் வீட்டில் மாறி மாறி வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கோவிந்தராஜிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் புற்று நோயில் இருந்து மீள முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துக்கு வந்துள்ளார். இந்த விவரத்தை தனது மனைவி சாந்தாமணியிடம் தெரிவித்தார். அவரும் மறுப்பு சொல்லாமல் சம்மதம் தெரிவித்தார். கடைசியாக அவர்கள் உடுமலையில் உள்ள மகேஷ் வீட்டில் தங்கியதாக தெரிகிறது.

உடல்கள் ஒப்படைப்பு

சம்பவத்தன்று தனது மகள் மகேஷிடம் சொல்லாமல் சாந்தாமணியை அழைத்துக்கொண்டு கோவிந்தராஜ் திருமூர்த்திமலைபகுதிக்கு வந்தார். அங்கு காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களுடைய உடல்கள் மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். புற்றுநோயில் இருந்து மீள முடியாமல் மனைவியுடன் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story