மது குடித்தவர்களிடம் செல்போன் திருடிய போலீஸ்காரருக்கு அடி-உதை


மது குடித்தவர்களிடம் செல்போன் திருடிய போலீஸ்காரருக்கு அடி-உதை
x

உடுமலையில் பரபரப்பு சம்பவம் மது குடித்தவர்களிடம் செல்போன் திருடிய போலீஸ்காரருக்கு அடி-உதை

திருப்பூர்

தளி

உடுமலை பஸ் நிலையம் வழியாக தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் சிலர் பயணிகளிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து செல்கிறார்கள். எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒவ்ெவாரு பஸ் நிலையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் பாதுகாப்பு நிற்கும் போலீசாரே பொதுமக்களிடம் ஜேப்படி செய்தால்.... அது போல்தான் உடுமலை பஸ் நிலையத்தில் நடந்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

அதன்படி நேற்று முன்தினம் இரவு 28 வயது மதிக்க போலீஸ்காரர் ஒருவர் உடுமலை பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பஸ் நிலையத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்தி கொண்டிருந்த நபர்களிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிக்க முயற்சித்து உள்ளார். இதையடுத்து பொதுமக்கள் அவரை பிடித்து அடித்து உதைத்தனர். ஒரு வழியாக அந்த போலீஸ்காரர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து தகவல் தெரிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

---

.

----------


Next Story