எய்ம்ஸ் கட்டும் இடத்தில் "தபால் பெட்டி" ஏற்படுத்திய பரபரப்பு


எய்ம்ஸ் கட்டும் இடத்தில் தபால் பெட்டி ஏற்படுத்திய பரபரப்பு
x
தினத்தந்தி 25 Sept 2022 1:57 AM IST (Updated: 25 Sept 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

எய்ம்ஸ் கட்டும் இடத்தில் "தபால் பெட்டி" ஏற்படுத்திய பரபரப்பு

மதுரை

திருப்பரங்குன்றம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோ.புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிட ப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் முதற்கட்டப்பணியாக 199.24 ஏக்கர் பரப்பளவை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் எய்ம்ஸ் கட்டுமான பணி உடனடியாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது நாள்வரை கட்டுமான பணி தொடங்கப்படாத நிலையே நீடித்து வருகிறது. இந்த நிலையில் சுற்றுச்சுவரின் நுழைவுவாயிலின் ஒரு பகுதியில் ஒரு "தபால் பெட்டி" வைக்கப்பட்டு இருந்தது. அதில் கூடல்புதூர், ஆனையூர், மதுரை என்று முகவரி எழுதப்பட்டு இருந்தது. மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கப்படாத நிலையில் தபால் பெட்டியா? என்று சிலர் கேள்வி எழுப்பினர்.


Next Story