நொய்யல் பகுதியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி
நொய்யல் பகுதியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கரூர்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, நத்தமேடு, தவிட்டுபாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிககள் வாழைகளை பயிரிட்டுள்ளனர். பின்னர் விளைந்தவுடன் வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்கின்றனர். மேலும் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் தொடர் மழையின் காரணமாக நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், பச்சநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-க்கும், மொந்தன் ரூ.600-க்கும் விற்பனையானது.
Related Tags :
Next Story