ஈரோட்டில் மீன்கள் விலை குறைந்தது
ஈரோட்டில் மீன்கள் விலை குறைந்தது
ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. புரட்டாசி மாதம் என்பதால் இந்து மதத்தை சேர்ந்த சிலர் அசைவம் தவிர்த்து விரதம் கடைபிடித்து வருகின்றனா். இதனால் இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமாக காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மீன் மார்க்கெட்டுக்கு நேற்று 20 டன் மீன்கள் வரத்தாகி இருந்தன. மீன்கள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக ரூ.1,000-க்கு விற்பனையான வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ.650-க்கும், ரூ.750-க்கு விற்கப்பட்ட விளா மீன் ரூ.450-க்கும், ரூ.250-க்கு விற்கப்பட்ட அயிலை மீன் ரூ.200-க்கும், ரூ.450-க்கு விற்கப்பட்ட தேங்காய் பாறை ரூ.400-க்கும் குறைந்து விற்பனையானது.
ஈரோடு மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை விவரம் வருமாறு:-
சங்கரா - ரூ.300, சீலா - ரூ.450, ஊளி மீன் - ரூ.400, கடல் அவுரி - ரூ.400, மத்தி - ரூ.150, கொடுவா - ரூ.400, முரல் - ரூ.250, திருக்கை - ரூ.350, கிளி மீன் - ரூ.500.