சேலத்தில் பூக்கள் விலை உயர்வு


சேலத்தில் பூக்கள் விலை உயர்வு
x

சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்ததுடன் குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கு விற்பனை ஆனது.

சேலம்

சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டுக்கு வீராணம், வலசையூர், கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்று செல்கின்றனர்.

சுபமுகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். வரத்து குறைவால் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நேற்று சில பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் கிலோ ரூ.500 வரை விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.400-க்கு விற்ற சன்னமல்லி ரூ.500-க்கு விற்கப்பட்டது. சம்பங்கி கிலோ ரூ.140-க்கும், ஜாதிமல்லி ரூ.280-க்கும், காக்கட்டான் ரூ.240-க்கும், அரளி ரூ.300-க்கும், சி.நந்தியாவட்டம் 400-க்கும் விற்பனையானது.


Next Story