பூக்கள் விலை கிடுகிடு உயர்வு


பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகைதீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.(திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து வகை பூக்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்து விட்டது. ராமநாதபுரம் பகுதியில் இதுவரை ஒரு கிலோ 1000 ரூபாயாக இருந்த மல்லிகைப்பூ ரூ.1500 ஆகவும், 800 ரூபாயாக இருந்த பிச்சிப்பூ ரூ.1200 ஆகவும், 2000 ரூபாயாக இருந்த கனகாம்பரம் ரூ.2500 ஆகவும், 1000 ரூபாயாக இருந்த முல்லைப்பூ ரூ.1500 ஆகவும், 300 ரூபாயாக இருந்த ரோஜாப்பூ ரூ.400 என அனைத்து வகை பூக்களும் பல மடங்கு விலை உயர்ந்து விட்டது.

விலை உயர்வு ஒரு புறம் இருந்தாலும் பெண்கள் போட்டி போட்டு மிகுந்த ஆர்வத்துடன் பூக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பூக்கள் விலை உயர்வு

இது குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த அமுதா கூறியதாவது:- சரஸ்வதி பூஜை வரை அனைத்து வகை பூக்களும் விலை உயர்வாகவே இருந்தது. அதன் பின்னர் பூக்களின் விலை சற்று குறைந்திருந்தது. தற்போது மீண்டும் தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி அனைத்து வகை பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது.

விலை உயர்வாக இருந்தாலும் சாமிக்கு பூஜை செய்வதற்கு பூக்கள் என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. அதனால் பூக்கள் வாங்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story