ஏல சந்தையில் பூக்கள் விலை குறைந்தது...


ஏல சந்தையில் பூக்கள் விலை குறைந்தது...
x
தினத்தந்தி 14 Jun 2023 6:45 PM GMT (Updated: 15 Jun 2023 7:19 AM GMT)

பரமத்திவேலூரில் ஏல சந்தையில் பூக்கள் விலை குறைந்தது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பூக்கள் சாகுபடி

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

விலை குறைந்தது

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.350-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.240-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் ஏலம் போனது.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.30-க்கும், அரளி கிலோ ரூ.110-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை குறைந்துள்ளதால் பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story