பூக்கள் விலை இருமடங்கு உயர்வு
ஆயுத பூஜையைமுன்னிட்டு காந்திமார்க்கெட்டில் பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
ஆயுத பூஜையைமுன்னிட்டு காந்திமார்க்கெட்டில் பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
ஆயுத பூஜை
ஆயுத பூஜை நாளையும் (திங்கட்கிழமை), விஜயதசமி நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையைமுன்னிட்டு காந்திமார்க்கெட்டில் அவல், பொரி, கடலை மற்றும் திருஷ்டி பூசணி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வீடுகள் மற்றும் தொழில்நிறுவனங்களை அலங்கரிக்க தேவையான தோரணங்கள், அலங்கார பொருட்களும் அதிகஅளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் ஆயுதபூஜையையொட்டி பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
அதன்படி கடந்த வாரம் ரூ.300-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை, முல்லை, ஜாதிபூ நேற்று ரூ.600-க்கு விற்கப்பட்டது. செவ்வந்தி ரூ.180 முதல் ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், அரளி ரூ.500-க்கும் பன்னீர்ரோஜா ரூ.200-க்கும், விருட்சிபூ-ரூ.250-க்கும் விற்கப்பட்டது.
இதேபோல் ஆயுதபூஜையின்போது, பயன்படுத்தக்கூடிய பூஜை பொருட்கள் காந்திமார்க்கெட்டில் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. வாழைத்தார், பூசணி, அவல், பொரி, கடலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.