நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கடும் சரிவு


நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கடும் சரிவு
x

நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கடும் சரிவடைந்துள்ளது.

கரூர்

பூக்கள்

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், மூலிமங்கலம், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

பூக்கள் நன்கு விளைந்தவுடன் பறித்து, லேசான சாக்குப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

பூக்களை வாங்கி செல்வதற்கு வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம் பகுதிகளை சேர்ந்த பூ வியாபாரிகள் வருகின்றனர்.

விலை சரிவு

கடந்த வாரம் குண்டு மல்லி 1 கிலோ ரூ.600-க்கு விற்றது தற்போது கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.100-க்கு விற்றது ரூ.80-க்கும், அரளி ரூ.150-க்கு விற்றது ரூ.80-க்கும், ரோஜா ரூ.250-க்கு விற்றது ரூ.160-க்கும், முல்லை ரூ.600-க்கு விற்றது ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280-க்கு விற்றது ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கு விற்றது ரூ.350-க்கும் விற்பனையானது.

திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story