கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு


கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
x

திருக்கார்த்திகை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப் படுவதையொட்டி வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன‌.

சென்னை,

தமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். மேலும் தீபத்திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பல கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கார்த்திகை தீபத்தையொட்டி பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ.1,800க்கு விற்கப்பட்ட மல்லிகை இன்று ரூ.2,200 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ரூ.50-க்கு விற்பனையான செவ்வந்திப்பூ இன்று ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. செவ்வந்திப்பூ அதிகளவில் விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதைப்போல தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,250-க்கும், மல்லிகை ரூ.1800-க்கும் விற்பனையானது.


Next Story