இளநீர் விலை ரூ.34 நிர்ணயம்


இளநீர் விலை ரூ.34 நிர்ணயம்
x
தினத்தந்தி 15 May 2023 4:00 AM IST (Updated: 15 May 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை ஒன்றியத்தில் இளநீர் விலை ரூ.34 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை ஒன்றியத்தில் இளநீர் விலை ரூ.34 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

விளைச்சல் குறைவு

ஆனைமலை ஒன்றியத்தில் 23 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்த போது, விவசாயிகள் பலர் இளநீர் அறுவடை செய்தனர். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இளநீர் விலையும் சரிவை சந்தித்தது. இதனால் விவசாயிகள் பாக்கு, ஜாதிக்காய், கோகோ, வாழை உள்ளிட்ட ஊடுபயிர்களை பயிரிட்டு வருவாய் ஈட்டினர்.

இந்தநிலையில் ஆனைமலை பகுதியில் இருந்து தினமும் 5 லட்சம் இளநீர் தமிழ்நாடு, டெல்லி, அரியானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. தற்போது பருவநிலை மாற்றம், தென்னை மரங்களில் நோய்வாய்ப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் இளநீர் விளைச்சல் குறைந்து உள்ளது. கோடை காலம் என்பதால் இளநீர் விலை அதிகரித்து உள்ளது.

விலை அதிகரிப்பு

ஆனால், தினமும் 5 லட்சம் இளநீர் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது 3 லட்சம் இளநீர் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இளநீர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுகுறித்து இளநீர் சங்கத்தினர் கூறுகையில்,

வெளி மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால், இளநீர் தேவை அதிகரித்து உள்ளது. இளநீர் விளைச்சல் குறைந்து உள்ளதால், அதன் விலை அதிகரித்து வருகிறது. தற்போது நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீரின் விலை ரூ.34 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு டன் இளநீரின் விலை ரூ.13,750 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் குறைந்த விலைக்கு வியாபாரிகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றனர். கடந்த மாதம் இளநீர் விலை ரூ.27 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரூ.7 விலை அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story