சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!


சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
x
தினத்தந்தி 5 Dec 2023 8:22 AM GMT (Updated: 5 Dec 2023 9:06 AM GMT)

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.1,000 சரிந்து ரூ.46,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.125 குறைந்து 5,850-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல வெள்ளியின் விலையும் பெரிய அளவில் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2,100 குறைந்து 81,400 ஆகவும், கிராமுக்கு 2 ரூபாய் 10 காசுகள் குறைந்து 81.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story