சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
சென்னை,
தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,620-க்கு விற்பனையாகிறது.
மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசு அதிகரித்து ரூ.77.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story