எலுமிச்சம் பழம் விலை `கிடு கிடு' உயர்வு


எலுமிச்சம் பழம் விலை `கிடு கிடு உயர்வு
x

கீரமங்கலம் பகுதியில் கடந்த மாதம் ரூ.7-க்கு விற்ற எலுமிச்சம் பழம் உற்பத்தி குறைந்துள்ளதால் தற்போது ஒரு கிலோ ரூ.70-ஆக உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டை

எலுமிச்சை உற்பத்தி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, அணவயல், பனங்குளம், குளமங்கலம், ேமற்பனைக்காடு, நெய்வத்தளி, பெரியாளூர், பாண்டிக்குடி உள்பட கீரமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தென்னை உள்ளிட்ட தோப்புகளில் ஊடுபயிராகவும், தனியாகவும் எலுமிச்சம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஒரு நாளைக்கு சுமார் 5 முதல் 10 டன் அளவிற்கு உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சம் பழங்கள் தஞ்சாவூர், மதுரை உள்பட பல பெரு நகரங்களுக்கும் கேரளாவுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

கிலோ ரூ.70

கீரமங்கலம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சம் பழங்கள் கீரமங்கலம், கொத்தமங்கலம், பனங்குளம், கைகாட்டி உள்ளிட்ட ஊர்களில் உள்ள காய்கனி கமிஷன் கடைகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ ரூ.7 முதல் ரூ.10, ரூ.20-க்கு விற்பனை ஆன நிலையில், தற்போது உற்பத்தி குறைந்துள்ளதாலும், கடும் வெயில் தாக்கத்தாலும் கடந்த சில நாட்களாக படிப்படியாக விலை உயர்ந்து கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக எலுமிச்சம் பழம் விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் தற்போது வெயிலின் தாக்கம், தேவைகள் அதிகரிப்பதாலும் விலை உயர்ந்துள்ளது என்றனர்.


Next Story