கண்ணீர் வர வைக்கும் தக்காளி விலை... ஒரு கிலோ எவ்வளவு ?


கண்ணீர் வர வைக்கும் தக்காளி விலை... ஒரு கிலோ எவ்வளவு ?
x

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் தக்காளியின் விலை கிலோவிற்கு 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் 50 முதல் 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளியின் விலை 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 70 ரூபாய்க்கும், நவீன் தக்காளி 75 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒருகிலோ வெங்காயம் 18 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 34 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஊட்டி கேரட் அதிகபட்சமாக 40 ரூபாய்க்கும், பீன்ஸ் 80 ரூபாய்க்கும், பீட்ரூட் 50 ரூபாய்க்கும் முட்டைகோஸ் மற்றும் கத்தரிக்காய் தலா 35 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story