தக்காளி விலை கிடுகிடுவென உயர்வு
வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி சாகுபடி
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர், மதுக்கரை, பாலத்துறை, நாச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளி கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படு கிறது.
மேலும் பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கோவை -மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு தக்காளி கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து தக்காளியை வியாபாரிகள் வாங்கிச்சென்று பிற பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.
விலை உயர்வு
கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் குறைவாக இருந் தது. ஆனால் கடந்த 2 நாட்களாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
அதன்படி கோவை எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.35-க்கு விற்பனையானது. அதுவே கடைகளில் சில்லரை விலைக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனையாகி வருகிறது.
அதுபோல மற்ற மார்க்கெட்டுகளிலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
வரத்து குறைந்தது
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கோவை மாவட் டத்தில் தற்போது பெய்த மழை காரணமாக தக்காளி செடிகள் சேதம் அடைந்தன. இதனால் தக்காளி மகசூல் குறைந்து விட்டது.
கர்நாடகாவில் இருந்து தினமும் 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி கொண்டு வரப்படும். அங்கும் மழை பெய்வதால் 10 லாரிகளில் மட்டுமே தக்காளி வருகிறது.
தேவைக்கு ஏற்ப தக்காளி வரத்து இல்லை. இதனால் தக்காளி விலை உயர்ந்து உள்ளது. மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றார்.