டேன்டீ தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்


டேன்டீ தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்
x
தினத்தந்தி 29 Aug 2023 2:45 AM IST (Updated: 29 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் உள்ள டேன்டீ தொழிற்சாலையில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் உள்ள டேன்டீ தொழிற்சாலையில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஆய்வு

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு வருகை தந்தார். அவர் கோடநாடு அருகில் தோடர் இன மக்கள் வசிக்கும் கோடுதேன் மந்து, நேர்தேன் மந்து பகுதிகளுக்கு செல்லும் வகையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் சாலை அமைப்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் குயின்சோலை பகுதியில் உள்ள டேன்டீ (அரசு தேயிலை தோட்டக்கழகம்) தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தயாரிக்கப்படும் தேயிலைத்தூளின் தரம், தேயிலை தொழிற்சாலையில் உள்ள உபகரணங்கள் மற்றும் தயாரிக்கப்படும் தேயிலைத்தூளின் ரகங்கள் பற்றி ஆய்வு செய்தார்.

தீர்வு காணப்படும்

இதையடுத்து டேன்டீ தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து பேசினார். அவர் பணியின் போது ஏதேனும் இடர்பாடுகள் உள்ளதா?, அவர்களின் குடியிருப்புகளில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் உள்ளதா? என தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள், டேன்டீ தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம், நிலுவைப்படி, போனஸ் உயர்வு குறித்தும், டேன்டீயை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

அதற்கு அமைச்சர் மதிவேந்தன், தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினார். ஆய்வின் போது முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் கவுதம், நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், கோத்தகிரி தாசில்தார் கோமதி, கீழ்க்கோத்தகிரி வனச்சரகர் ராம்பிரகாஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story