நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் -ராமதாஸ்


நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் -ராமதாஸ்
x

நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் 2023-2024-ம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,183 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நெல் கொள்முதல் விலையை கட்டுப்படியாகும் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், மிகக்குறைந்த அளவில் மட்டுமே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கொள்முதல் விலை மட்டும் வழங்கப்பட்டால், விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.300 மட்டுமே லாபமாக கிடைக்கும். அதிலும் கூட நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லுதல் செலவுகளுக்குப் பிறகு பார்த்தால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் மிஞ்சாது. எனவே, நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். நெல் உற்பத்திக்காக செய்யப்படும் அனைத்து செலவுகளையும் கருத்தில் கொண்டு நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் ஆக நிர்ணயிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story