சூரியனை ஆய்வு செய்யும் திட்டம் ஒரு ஆண்டில் நிறைவேறும்-இஸ்ேரா முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி


சூரியனை ஆய்வு செய்யும் திட்டம் ஒரு ஆண்டில் நிறைவேறும்-இஸ்ேரா முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
x

சூரியனை ஆய்வு செய்யும் திட்டம் ஒரு ஆண்டில் நிறைவேறும் என்று இஸ்ேரா முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

திருச்சி

சூரியனை ஆய்வு செய்யும் திட்டம் ஒரு ஆண்டில் நிறைவேறும் என்று இஸ்ேரா முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

சந்திரயான்-3

திருவெறும்பூர் அருகே காட்டூர் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவுக்கு செல்வதற்காக இந்தியாவை நாடி உள்ளது. சந்திரயான்-3 பூமியை தாண்டி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது மிக சிறப்பான செயல். தற்போது முக்கியமான கட்டத்தை தாண்டி இருக்கின்றோம். நிலவின் நீள் வட்டப் பாதையில் நிலை நிறுத்தி உள்ளனர். பாகங்கள் பிரிக்கப்பட்டு விக்ரம் லாண்டர் பிரிந்து, வருகிற 23-ந் தேதி நிலவின் தரையை தொடும். அதனை தொடர்ந்து சந்திரயான் விண்கலம் தானாக நிலவிற்கு தகுந்தாற் போல வேகத்தில் செல்லும்.

அப்போது நிலவில் உள்ள மண்ணின் தன்மை, வெப்ப நிலை ஆகியவற்றை ஆய்வு செய்யும். தற்போது சந்திரயான்-3 நிலவின் படத்தை எடுத்து அனுப்பி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய கால்தட படத்தை அமெரிக்கா எடுத்தது போல இந்தியாவின் விக்ரம் லாண்டரின் சக்கர தடத்தை நாம் பார்ப்பதற்கான சாத்தியம் உள்ளது.

மனிதர்களை அனுப்ப...

அமெரிக்காவின் நாசா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப முடிவெடுத்துள்ளது. அந்தத் திட்டத்தில் சர்வதேச அளவில் மற்ற நாடுகள் இணைந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகின்றனர். ஏன் என்றால், அந்த திட்டம் மிக பெரிய திட்டம், மனிதர்கள் அங்கு வாழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும், அங்கு சர்வதேச விண்வெளி மையம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். நமது பிரதமர் அமெரிக்கா சென்ற போது அந்த திட்டத்தில் இந்தியா இணைய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

ஏ1 தொழில் நுட்பம் மிகவும் தேவையானது. அதை நோக்கிய பயணத்தில் நாம் சிறப்பாக உள்ளோம். அதேபோன்று சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா திட்டம் முன்னெடுப்பில் உள்ளது. அனேகமாக ஒரு ஆண்டில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story