31-ந் தேதி போராட்டத்தை திரும்பபெற வேண்டும்


31-ந் தேதி போராட்டத்தை திரும்பபெற வேண்டும்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக வருகிற 31-ந் தேதி அறிவித்த போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் கோவையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோயம்புத்தூர்


காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக வருகிற 31-ந் தேதி அறிவித்த போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் கோவையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டம்

கோவையில் தற்போது உள்ள அமைதி சூழ்நிலை குறித்து தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் வடகோவையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கோவையில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே வருகிற 31-ந் தேதி நடத்துவதாக அறிவித்த போராட்டத்தை பா.ஜ.க. திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் பி.ஆர்.நடராஜன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

நிராகரிப்பு

கோவையில் விரும்பத்தகாத நிகழ்வு நடந்தது. உடனடியாக உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்து துரித நடவடிக்கை எடுத்ததோடு, தீபாவளி பண்டிகையை மக்கள் அமைதியான முறையில் கொண்டாட தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை இக்கூட்டம் வரவேற்கிறது.

காவல் துறையின் உளவு பிரிவின் நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களை இந்த கூட்டம் நிராகரிக்கிறது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் என்.ஐ.ஏ.வின் (தேசிய புலனாய்வு முகமை) கட்டுப்பாட்டில் இருந்தார் என்று கூறுகிறார்கள்.

ஒத்துழைப்பு வேண்டும்

அப்படியானால் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசை குறை சொல்பவர்கள் இது என்.ஐ.ஏ.வின் (தேசிய புலனாய்வு முகமை) தோல்வி என தெரிவிப்பார்களா?.

மேலும் இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது, கோவையில் புதிதாக 3 போலீஸ் நிலையங்கள், தமிழகம் முழுவதும் உளவுத்துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கை, இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது வரவேற்கத்தக்கது.

கோவையில் பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் வருகிற 31-ந் தேதி சில அரசியல் கட்சியினர் போராட்டம் அறிவித்து உள்ளனர். தற்போது கோவையில் நிலவி வரும் அமைதியான சூழலை கருத்தில்கொண்டு போராட்டத்தை திரும்ப பெற்று ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story