பொது மயானத்தை மேம்படுத்த வேண்டும்


பொது மயானத்தை மேம்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அரசூர் ஊராட்சியில் பொது மயானத்தை மேம்படுத்த வேண்டும்; கிராம மக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே அரசூர் ஊராட்சியை சேர்ந்த மணலகரம் கிராமத்தில் பொது மயானம் உள்ளது. கண்டிராஜநல்லூர், திருச்சிற்றம்பலம், மணலகரம், தொல்காப்பியக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் குடும்பங்களில் யாரேனும் இறந்தால் இந்த பொதுமயானத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டியும், அடக்கம் செய்தும் வருகின்றனர்.

கொள்ளிடம் வட்டாரத்திலேயே அனைவரும் எந்த பாகுபாடும் இன்றி உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் பொது மயானமாக அரசூர் ஊராட்சியை சேர்ந்த மணலகரம் கிராமத்தில் உள்ள மயானம் இருந்து வருகிறது. இதனால் இந்த மயானம் சமத்துவ மயானம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த மயானத்தில் மயான எரியூட்டு கொட்டகைகள் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு மின்விளக்கு வசதி இல்லாமலும், மயானம் பள்ளமாகவும், மேடாகவும் சமன்படுத்தாமல் உள்ளது. இந்த மயானத்தை சுற்றி சுற்றுச்சுவரும் அமைக்கப்படவில்லை. இங்கு தண்ணீர் வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும்போது தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பியும், மேடு பள்ளங்களை சமப்படுத்தியும், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story