பள்ளிக்கு புதிய கட்டிடம் கோரி 8 ஆண்டுகளாக மனு கொடுக்கும் பொதுமக்கள்


பள்ளிக்கு புதிய கட்டிடம் கோரி 8 ஆண்டுகளாக மனு கொடுக்கும் பொதுமக்கள்
x

வெண்ணத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சம்பையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கோரி 8 ஆண்டுகளாக பொதுமக்கள் மனு கொடுத்து வருகிறார்கள்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் வெண்ணத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சம்பை கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெற்றோர்கள் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நீண்ட காலமாக பராமரிப்பின்றி இடியும் தருவாயில் உள்ளது. இந்த பள்ளியில் உபயோகமற்ற கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி கடந்த 8 ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆபத்தான அந்த கட்டிடத்தில்தான் இன்றளவும் பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் பயிலும் 45 மாணவ மாணவிகள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். பழுதடைந்த பள்ளி கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் எங்கள் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து கல்வித்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story