ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 6 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. தற்போது ஜெயங்கொண்டம் நகரப்பகுதியில் டாஸ்மாக் கடைகள் இல்லாத சூழலில் தில்லைநகரில் புதிதாக டாஸ்மாக்கடை திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டம், சின்னவளையம், வேலாயுதநகர், கீழக்குடியிருப்பு, சிதம்பரம் ரோடு தனியார் பள்ளி அருகே, கரடிகுளம் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சூரியமணல் உள்ளிட்ட இடங்களில் மதுபாட்டில்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுபாட்டில்களை வயல்வெளி பகுதி மற்றும் வீடுகளில் பதுக்கி வைத்து, அங்கிருந்த மேற்குறிப்பிட்ட சந்து கடைகளுக்கும் மர்ம நபர்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே மது விற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story