செறிவூட்டிய அரிசியால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை


செறிவூட்டிய அரிசியால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தாலுகாவில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என வட்ட வழங்கல் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என வட்ட வழங்கல் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செறிவூட்டப்பட்ட அரிசி

திருவாடானை தாலுகாவில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமை பொருட்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. சில கிராமங்களில் ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிகவும் அதிகமாக உள்ளதால் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்யும் விதமாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். இது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அச்சப்பட தேவையில்லை

அதன் அடிப்படையில் உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் எதற்காக அரிசி செறிவூட்டப்படுகிறது? செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? செறிவூட்டப்பட்ட அரிசியை உருவாக்க பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் என்ன? என்பது குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை தண்ணீரில் கழுவி பயன்படுத்தும் போது தண்ணீரில் அரிசி மிதப்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் வட்ட வழங்கல் அலுவலர் சிராஜூதீன் தெரிவித்தார்.


Next Story