ஏரி மண் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடிப்பு


ஏரி மண் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடிப்பு
x

ராணிப்பேட்டை அருகே ஏரி மண் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் அருகே உள்ளது கல்மேல்குப்பம். இங்குள்ள ஏரியிலிருந்து நேற்று மாலை லாரி ஒன்று ஏரி மண் ஏற்றிக்கொண்டு வந்தது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஏரி மண் எடுத்தால், தங்களுடைய நீர் ஆதாரம் பாதிக்கும் என்று கூறி அந்த லாரியை சிறைப்பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, வருவாய் ஆய்வாளர் ரகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, லாரியை சிறைபிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் லாரியை சிறை பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Next Story