அதிகாரிகளை தவிர இடைத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் அணுக வேண்டாம்


அதிகாரிகளை தவிர இடைத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் அணுக வேண்டாம்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளை தவிர இடத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் கூறினார்

கடலூர்

கடலூர் முதுநகர்

விழிப்புணர்வு கூட்டம்

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் கேப்பர் மலையில் உள்ளது. இங்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர டிரைவிங் லைசென்ஸ், புதிய வாகன நம்பர் வழங்குவது, பழைய வாகனங்களுக்கு தகுதி சான்று மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

அறிவிப்பு பலகை

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் இதர பணிகளுக்கு, ஆன்லைன் மூலம் அப்ளை செய்த பின், நேரடியாக அலுவலகத்திற்கு வந்து, இங்கு உள்ள அதிகாரிகள் மூலம் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். இடைத்தரகர் யாரையும் அணுக வேண்டாம்.

அதேபோல், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளும் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் மற்றும் மனுக்களை நேரடியாக பெற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேறு எவரிடமும் அனுப்பக்கூடாது. மேலும் பொது மக்களுக்கு எந்தெந்த பணிகளுக்கு, எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பது குறித்த விவரம் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், அன்பழகன், சுந்தர்ராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) முக்கண்ணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் விஜய், பிரான்சிஸ், சோமசுந்தரம், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர விற்பனையாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story