கோவிலை இடிக்கச்சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்


கோவிலை இடிக்கச்சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
x

கோவிலை இடிக்கச்சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

திருச்சி

திருச்சி ராம்ஜிநகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்க பணி சோழன் நகரில் இருந்து பொன்நகர் வரையுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ராம்ஜிநகர் மெயின்ரோட்டில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாைல விரிவாக்க பணி நடைபெறும் நிலையில், அப்பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பழமை வாய்ந்த முருகன் கோவிலின் முன் பகுதியை இடித்து, அகற்றுவதற்காக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வந்தனர். அப்போது அவர்களை, அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன், மேற்கு தாசில்தார் ராஜவேல் மற்றும் ராம்ஜிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் அங்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுகதீர்வு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story