சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் திருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி காந்திக்குப்பம் புதிய காலனி நரிக்குறவர் தெருவில் புதிய தார் சாலை போடும் பணி நடைபெறுகிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் தொடங்கியது. இதுபற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலையின் இருபுறங்களிலும் கால்வாய் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தந்துவிட்டு, புதிய தார் சாலை போடும் பணியை தொடங்க வேண்டும் என்று கூறி, பணிகளை தடுத்து நிறுத்தி அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கால்வாய் மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்துவிட்டு, பணிகளை தொடங்குவதாக கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story