மின்தடையால் பொதுமக்கள் அவதி


மின்தடையால் பொதுமக்கள் அவதி
x

மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்று வீசியது. அப்போது இடி, மின்னலும் ஏற்பட்டது. இதனால் மாலை 4 மணி அளவில் அரும்பாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. பின்னர் இரவு வரை மின்தடை சரி செய்யப்படாமல் இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கோடைகாலம் என்பதால் காற்று வசதி இல்லாமலும், கொசு தொல்லையினாலும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.


Next Story