கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும்


கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும்
x

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்காய் விலை சரிவு

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் நகர்ப்புறங்களில் பெரும்பாலான பகுதிகளில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கரும்பு பயிருக்கு மாற்றாக கரும்பு தோட்டங்கள் உள்ள இடங்களில் தென்னை மரங்கள் நடவு செய்யும் பணி தொடங்கி விட்டனர். இந்தநிலையில் தேங்காய் விலை சரிவை நோக்கி சென்றுவிட்ட நிலையில் தென்னை விவசாயிகள் மாற்று வழி தெரியாத நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா கூறியதாவது:-

தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய இயலாத நிலையில் கொப்பரை தேங்காய் மத்திய அரசு விலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 வீதம் முடிவு செய்யப்பட்டது.

கொள்முதல்

கட்டுக்குத்தகை விவசாயிகள் கூடுதலாக உள்ளதால் அவர்கள் பயன்படும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் விவசாயிகளுக்கு பலனாக இருக்கும். தேங்காயிலிருந்து தேங்காய் கொப்பரை மாற்ற கொச்சின் தேங்காய் வளர்ச்சி வாரியத்தில் இருந்து தேங்காய் உலர்க்களம் மற்றும் உணர்த்தும் சூரிய சக்தி எந்திரம் இருந்தால் விவசாயிகளுக்கு ஏதுவாக இருக்கும். ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தென்னை விவசாயிகளிடம் ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும்.

இலக்கு நிர்ணயம்

எனவே ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகள் கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்க மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 300 மெட்ரிக் டன் கொள்முதல் என்று இருந்ததை தற்போது 200 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 500 மெட்ரிக் டன் வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இருக்கும் நிலையில் 200 ஆக குறைத்து இருப்பது தென்னை விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.

எனவே அரசு பரிசீலனை செய்து ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 500 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story