கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது


கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது
x

தோவாளையில் கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

தோவாளை ஊராட்சிக்குட்பட்ட புதூரில் உள்ள குடியிருப்புக்கு பின்புறம் உள்ள கால்வாயில் நேற்று மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்த ஊராட்சி துணைத்தலைவர் என்.எம்.தாணு ஆரல்வாய்மொழி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே வேட்டை தடுப்பு காவலர் பிரவின் வந்து மலைப்பாம்பை பிடித்தார். 10 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

1 More update

Next Story